பிரபல இந்திய மருத்துவரும் அறிவியலாளருமான டாக்டர் சுபாஷ் பாபுவுக்கு மதிப்பு மிக்க பெய்லி K. ஆஷ்ஃபோர்ட் பதக்கம் (2022) மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க வெப்பமண்டல மருத்துவம் மற்றும் சுகாதாரவியல் சமூகத்தின் உறுப்பினர் அந்தஸ்து (FASTMH) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
அவரது மகத்தான ஆராய்ச்சிப் பணி மற்றும் வெப்பமண்டல மருத்துவத்தில் அவர் ஆற்றியப் பங்களிப்பு ஆகியவற்றிற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
அமெரிக்க வெப்பமண்டல மருத்துவம் மற்றும் சுகாதாரவியல் சமூகம் என்பது வெப்ப மண்டல மருத்துவத் துறையில் புகழ்பெற்ற, உலகின் மிகப்பெரிய அறிவியல் அமைப்பு ஆகும்.
வெப்பமண்டல மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடைநிலை-தொழில்துறை-ஆய்வாளர்களுக்கு ஆண்டுதோறும் இந்தப் பதக்கமானது வழங்கப் படுகிறது.
இந்த விருது வழங்கப்படத் தொடங்கிய 82 ஆண்டு கால வரலாற்றில், இதுவரை இந்திய அறிவியலாளர்களுக்கோ அல்லது ஒரு இந்திய நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிப் பணிகளுக்கோ இது வழங்கப்படவில்லை.