TNPSC Thervupettagam
November 18 , 2022 612 days 297 0
  • பிரபல இந்திய மருத்துவரும் அறிவியலாளருமான டாக்டர் சுபாஷ் பாபுவுக்கு மதிப்பு மிக்க பெய்லி K. ஆஷ்ஃபோர்ட் பதக்கம் (2022) மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க வெப்பமண்டல மருத்துவம் மற்றும் சுகாதாரவியல் சமூகத்தின் உறுப்பினர் அந்தஸ்து (FASTMH) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
  • அவரது மகத்தான ஆராய்ச்சிப் பணி மற்றும் வெப்பமண்டல மருத்துவத்தில் அவர் ஆற்றியப் பங்களிப்பு ஆகியவற்றிற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • அமெரிக்க வெப்பமண்டல மருத்துவம் மற்றும் சுகாதாரவியல் சமூகம் என்பது வெப்ப மண்டல மருத்துவத் துறையில் புகழ்பெற்ற, உலகின் மிகப்பெரிய அறிவியல் அமைப்பு ஆகும்.
  • வெப்பமண்டல மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடைநிலை-தொழில்துறை-ஆய்வாளர்களுக்கு ஆண்டுதோறும் இந்தப் பதக்கமானது வழங்கப் படுகிறது.
  • இந்த விருது வழங்கப்படத் தொடங்கிய 82 ஆண்டு கால வரலாற்றில், இதுவரை இந்திய அறிவியலாளர்களுக்கோ அல்லது ஒரு இந்திய நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிப் பணிகளுக்கோ இது வழங்கப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்