குன்னத்தில் (பெரம்பலூர்) 25க்கும் மேற்பட்ட கூட்டுப் பொருட்கள் (அம்மோனியம் படிவுகள்) காணப்பட்டன.
உத்தத்தூர் உருளைக்கிழங்கு என்று அழைக்கப் படும் வட்ட வடிவ பாஸ்பேடிக் திரள்களும் குன்னம் மற்றும் காரை பகுதிகளில் கிடைத்தன.
இப்பகுதியில் உள்ள ஆனைவரி என்ற நீரோட்டத்தில் ஒரு புதைபடிவ மரம் (fossilised tree) மற்றும் அம்மோனைட் படிவுகள் காணப்பட்டன.
அம்மோனைட் (அம்மோனாய்டுகள்) என்பவை ஒரு பெரிய மற்றும் மாறுபட்ட கடல்வாழ் இனமாகும்.
இது சுமார் 416 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெவோனியன் காலத்தில் தோன்றியது.
அம்மோனாய்டுகள் மூன்று பேரழிவுகளிலிருந்து தப்பியுள்ளன.
அதில், பெர்மியன் அழிவு என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இது சுமார் 252 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலைச் செயல்பாட்டினால் ஏற்பட்ட ஒரு புவி வெப்பமடைதல் நிகழ்வு ஆகும்.
இது பூமியின் கடல் உயிரினங்களில் 96 சதவீதத்தை அழித்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டின் அரியலூர் பகுதியில் 6.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்ததாக தொல்பொருள் சான்றுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதற்கான முட்டைகளின் எச்சங்கள் அரிதாகவே காணப்படுகின்றன.
தற்போதைய தமிழ்நாட்டில் இருக்கும் முந்தைய காலத்திய அரியலூர் மற்றும் பெரம்பலூர் பகுதிகள் கடலில் மூழ்கியிருந்தன.
சுமார் ஒன்பது பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு துரோனியன் - செனோமானியன் கிரெட்டேசியஸ் காலத்தில் (Turonian-Cenomanian Cretaceous period) கடலின் ஆழம் சுமார் 100 மீட்டர் என்ற அளவில் இருந்த போது குன்னத்தில் இருக்கும் இந்தப் புதைபடிவங்கள்உருவாகியிருக்கலாம்.