TNPSC Thervupettagam

பெரிய காட்டு ஆந்தை

January 22 , 2023 678 days 461 0
  • பெரிய காட்டு ஆந்தையானது முதல் முறையாக ஆந்திராவின் சேஷாசலம் காட்டில் தென்பட்டுள்ளது.
  • அடர்ந்த காடுகளில் உள்ள பெரிய மரங்களில் காணப்படும் இந்தப் பறவையின் வாழ்விடம், இந்திய துணைக் கண்டம் முழுவதும் பரவியுள்ளது.
  • ஆனால், இதற்கு முன்பு இம்மாநிலத்தில் இரண்டு முறை மட்டுமே இது தென்பட்டுள்ள நிலையில், அந்த இரண்டு முறையும் அது நாகார்ஜுனாசாகர் ஸ்ரீசைலம் புலிகள் காப்பகத்தில் மட்டுமே தென்பட்டது.
  • இப்பறவை மனிதர்களைப் போல் ஒரு விசித்திரமான அலறலையே உருவாக்குவதால், இது இந்தியாவில் ‘காட்டில் வாழும் பேய்’ என்றும் இலங்கையில் ‘அசுர பறவை’ என்றும் அழைக்கப் படுகிறது.
  • இந்த வகை ஆந்தை இனங்கள் இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், வங்காளதேசம், மியான்மர், சீனா, தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் பரவிக் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்