மிகப்பெரிய அறியப்பட்ட முதல் எண்ணாக (largest known Prime number) 23 மில்லியன் இலக்க நீட்சியுடைய பெரிய முதல் எண் கணிதவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
GIMPS என்றழைக்கப்படும் மென்பொருளைப் பயன்படுத்தி இந்தப் பெரும் முதல் எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாலும் (ஒன்று) தன்னாலும் மட்டுமே வகுபடக் கூடிய எண்கள் முதல் எண்கள் (Prime numbers) எனப்படும். எ.கா 2, 3, 5, 7, 11 போன்றவை
இரகசிய எழுத்து முறை எனப்படும் கிரிப்டோகிராபி, (இரகசிய குறியீடுகள் மூலம் தகவல்கள் பகிர்ந்து கொள்ளுதலை பயன்படுத்தும் இரகசிய தகவல்களின் ஆய்வு) கடன் அட்டைகள், கைபேசி எண்கள் போன்றவற்றில் முதல் எண்கள் பயன்படுத்தப்படுகின்றது.