TNPSC Thervupettagam

பெரிய வளைய வடிவ அமைப்பு

February 3 , 2024 296 days 268 0
  • அறிவியலாளர்கள் பெரிய வளையம் எனப்படுகின்ற ஒரு மிகப்பெரிய வளைய வடிவ அமைப்பைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது வியக்கத்தக்க வகையில் பூமியிலிருந்து சுமார் 9.2 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • இந்த மாபெரும் வானியல் அமைப்பானது பல்வேறு அண்டங்கள் மற்றும் அண்டத் தொகுப்புகளால் ஆனது.
  • இதன் விட்டம் தோராயமாக 1.3 பில்லியன் ஒளியாண்டுகள் ஆகும் என்பதோடு மேலும் இதன் மொத்தச் சுற்றளவு 4 பில்லியன் ஒளியாண்டுகள் ஆகும்.
  • இது பூமியிலிருந்து பார்க்கும் போது இரவு வானில் தெரியும் நிலவினை விட தோராயமாக 15 மடங்கு பெரியதாக தோன்றுகிறது.
  • லோபஸ் மற்றும் அவரது சகாக்களால் 2021 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்ட இரண்டாவது மாபெரும் அமைப்பு இதுவாகும்.
  • மாபெரும் வில் அமைப்பு எனப்படும் முதலாவது அமைப்பான இது உண்மையில் அதே தொலைவில் வானில் அதே அளவு பரந்து விரிந்து காணப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்