யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையேயான கடல்சார் ஆணையமானது ஐஸ்லாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான பெருங்கடல்களின் நிலை குறித்த அறிக்கையினை (StOR) வெளியிட்டுள்ளது.
பெருங்கடல் மேற்பரப்பில் 2,000 மீட்டர் (மீ) என அளவில் 1960 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஒரு சதுர மீட்டருக்கு 0.32 ± 0.03 வாட் (W/m2) என்ற விகிதத்தில் வெப்பம் அடைந்தன.
கடந்த இருபது ஆண்டுகளில் மிக துரிதப்படுத்தப்பட்ட கடல் வெப்பமயமாதலில், இந்த விகிதம் 0.66 ± 0.10 W/m2 என்ற அளவில் இரட்டிப்பாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டில், 638 நிலையங்களில் அதிகளவிலான கடல் pH மதிப்புகள் பதிவாகி உள்ளன.
1993 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான உலகளாவிய சராசரி கடல் மட்ட உயர்வு ஆண்டிற்கு 3.4 +/-0.3 மிமீ என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது.