TNPSC Thervupettagam

பெருசெட்டஸ் கொலோசஸ்

August 5 , 2023 477 days 290 0
  • பெருசெட்டஸ் கோலோசஸ் எனப்படும் திமிங்கலத்தின் பகுதியளவிலான எலும்புக் கூடு பெரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த திமிங்கலம் ஆனது இதுவரை வாழ்ந்தவற்றிலேயே அதிக எடையுள்ள ஒரு விலங்காக இருக்கலாம் என்று கருதப் படுகிறது.
  • இந்த விலங்கு ஆனது சுமார் 20 மீட்டர் (65 அடி) நீளமானது.
  • நவீன கால நீலத் திமிங்கலம் ஆனது வெகு காலமாக மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்ட விலங்காக கருதப்படுகிறது.
  • கின்னஸ் உலக சாதனைப் புத்தக பதிவின் படி, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப் பெரிய நீல திமிங்கலம் 190 டன் எடை கொண்டது.
  • ஆனால் இந்த பண்டைய காலத் திமிங்கலத்தின் எடையானது 85 முதல் 340 டன்கள் வரை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்