TNPSC Thervupettagam

பெருஞ் சிவப்பு நீல நிகழ்வு

January 29 , 2018 2363 days 991 0
  • அரிய பிரபஞ்ச நிகழ்வான “பெருஞ் சிவப்பு நீல நிலவு“ நிகழ்வு (Super Blood Blue Moon) ஜனவரி 31ஆம் தேதி உலகின்  ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், இரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் வடஅமெரிக்காவின் மேற்குப் பகுதிகளில் காட்சிப்பட உள்ளது.
  • ஒரு முழு சந்திர கிரகணம், ஒரு நீல நிலவு (Blue Moon), நிலவின் மிகப்பெரிய தோற்றம் (Super Moon) போன்றவை  ஒரு சேர நிகழ்வது பெருஞ்சிவப்பு நீல நிலவு நிகழ்வு (Super Blood Blue Moon) எனப்படும்.

பெரும் நிலவு (Super Moon)

  • பூமிக்கான தன்னுடைய சுற்றுப் பாதையில், பூமிக்கு அருகில், மிகவும் அண்மை நிலையில் (Perigee) நிலவு இருக்கும்போது முழு நிலவு நிகழ்வு (Full Moon) எனப்படும் பௌர்ணமி ஒத்திசைந்தால் பெரும் நிலவு (Super Moon) நிகழ்வு சம்பவிக்கும்.
  • பெரும் நிலவு நிகழ்வின் போது வழக்கத்தைவிட நிலவு 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் காட்சி தரும்.
  • பூமிக்கான நிலவின் சுற்றுவட்டப்பாதையில், நிலவு  பூமிக்கு தொலைவில் இருப்பது நிலவின் சேய்மைத் தொலைவு (Apogee) எனப்படும்.
  • பூமிக்கான நிலவின் சுற்றுவட்டப்பாதையில், நிலவு  பூமிக்கு அருகில்   இருப்பது நிலவின் அண்மைத் தொலைவு (Perigee) எனப்படும்.

சந்திர கிரகணம் (Lunar Eclipse)

  • பூமியினுடைய நிழலை நிலவு கடந்து செல்லும் வண்ணம், சூரியனும், பூமியும், நிலவும் அமைந்திருக்கும் போது சந்திர கிரகணம் (Lunar Eclipse) உண்டாகும்.
  • சூரியன் மற்றும் நிலவிற்கு இடையே பூமி இருக்கும் போது, சூரியக் கதிர்களின் பூமியினுடைய மறைப்பால் ஏற்படக்கூடிய நிழலின் வழியே சந்திரன் கடக்கும் போது நிலவு படிப்படியாக ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறமடையும்.
  • இதன் காரணமாக, முழுமையாக கிரகணத்திற்குட்பட்ட நிலவானது “சிவப்பு நிலவு“ (Blood Moon) என்றழைக்கப்படுகின்றது.
  • பூமியினுடைய வளிமண்டலத்தின் வழியே பூமியை நோக்கி வருகின்ற சூரியக் கதிர்களாவனது உடைபடுவதும், உடைபட்ட கதிர்களின் சிவப்பு பகுதிகள் மட்டும் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படுவதும், சிதறடிக்கப்பட்ட சிவப்புப் பகுதிகள் நிலவின் மேற்பரப்பில் படுவதுமே இந்த சிவப்பு நிற மாற்றத்திற்கு காரணமாகும்.

நீல நிலவு

  • ஒரு மாதத்தில் நிகழ்கின்ற இரண்டாவது முழு நிலவு (பௌர்ணமி - Full Moon) அல்லது இரண்டாவது சந்திர கிரகணம் நீல நிலவு (Blue Moon) எனப்படும்.
  • இந்த நிகழ்வின் போது நிலவு நீல நிறம் அடைவதில்லை.
  • ஆனால் வரலாற்றுக் காலமாக, ஒரே மாதத்தில் நிகழுகின்ற இரண்டாவது முழுநிலவு நிகழ்வானது ஆங்கில மாத நாட்காட்டியால் “நீல நிலவு“ என்றழைக்கப்படுகின்றது.
  • நீல நில நிகழ்வானது ஒவ்வொரு இரு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதத்திற்கு  ஒரு முறை நடைபெறும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்