TNPSC Thervupettagam

பெருநிறுவன ஆளுகைக் குழு

August 1 , 2017 2719 days 1034 0
  • சமீபத்தில், இந்தியாவில் பட்டியலிடப்பட்ட குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பெருநிறுவன ஆளுகைத் தரத்தினை மேம்படுத்துவதற்காக கோடக் மஹிந்திரா வங்கியின் தலைவரான உதய் கோடக் தலைமையில் ஒரு குழுவை இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India - SEBI) நியமித்துள்ளது.
  • இந்தக் குழுவானது பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் (Public Sector Enterprises - PSE) எதிர்கொள்ளும் பெருநிறுவன நிர்வாக சவால்களை கருத்தில் கொண்டு செயல்படும்.
  • அரசுகளின் நியமனக் கொள்கை, சுதந்திர இயக்குநர்களின் நியமனம் மற்றும் நிர்வாகப் பங்கு , பொறுப்புடைமை மற்றும் குழுக்களின் தன்னாட்சி உரிமை போன்ற விவாதங்கள் இக்குழுவினால் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
  • பொதுத் துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு இடையே சமமான போட்டி நிலைகளை உருவாக்கவும் , இந்நிறுவனங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பார்வையில் கொண்டு வரவும் இந்தக் குழு பரிசீலிக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்