TNPSC Thervupettagam

பெருநிறுவன விவகாரத்திற்கான இந்திய நிறுவனம் திட்டம்

November 24 , 2017 2588 days 1002 0
  • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவையானது பெருநிறுவன விவகாரத்திற்கான இந்திய நிறுவன திட்டம் (Scheme on Indian Institute of Corporate Affairs) அடுத்த மூன்று நிதி ஆண்டுகள் (FY 2017-18 to 2019-20) வரை தொடர அனுமதி அளித்துள்ளது.
  • இதன் மூலம் பெருநிறுவன விவகாரத்திற்கான இந்திய நிறுவனம் (IICA- Indian Institute of Corporate Affairs) தேசிய முக்கியத்துவம் (Institute of National Importance) வாய்ந்த நிறுவனமாக உருவாகும்.
  • IICA ஆனது மத்திய பெருநிறுவன விவாகரத்துறை அமைச்சகத்தின் (Ministry of Corporate Affairs)  அதிகார வரம்பின்  கீழ் செயல்படும் ஓர் நிறுவனமாகும்.
  • இது 2008-ல் குருகிராமில் உள்ள மானேசரில் அமைக்கப்பட்டது.
  • இது முக்கிய அமைச்சகங்களுக்கு ஆலோசனை வழங்கிட சிந்தனையாளர் குழுவாக முறையாக ஏற்படுத்தப்பட்ட முதல் இந்திய நிறுவனமாகும்.
  • பெருநிறுவன சட்டங்கள், பெருநிறுவன நிர்வாகம், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வுகள் பொறுப்புணர்வுகளை (CSR – Corporate Social Responsibility), கணக்கீட்டு தரம், முதலீட்டாளர் கல்வி போன்ற பல்வேறு தளங்களில் பங்கு தாரர்களுக்கு இது சேவையை வழங்குகிறது.
  • IICA-ல் உள்ள பெருநிறுவன சமூக பொறுப்புணர்வுகளுக்கான தேசிய அறக்கட்டளையானது (Nation Foundation for Corporate Social Responsibility) நாடு முழுவதும் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வுகளை நிர்வகிக்கப் பொறுப்புடையதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்