TNPSC Thervupettagam

பெருந்தடுப்பு பவளப் பாறைப் பகுதியில் வாழும் மீன்களின் வண்ணம் குன்றுதல்

March 28 , 2022 847 days 405 0
  • பருவநிலை மாற்றத்தின் காரணமாக, கடல்கள் வெப்பமடைகின்றன.
  • இதனால் பவளப் பாறைகள் தொடர்ந்து வெளுக்கப்படுவதால் ஆஸ்திரேலியாவின் பெருந்தடுப்பு பவளப் பாறைப் பகுதியில் வாழும் மீன்களின் வண்ணம் மங்குவதற்கும் அவற்றின் நிறத்தை இழப்பதற்கும் அவை காரணமாகின்றன.
  • குளோபல் சேஞ்ச் பயாலஜி என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.
  • ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த டாக்டர் ஹெமிங்சன் இந்த ஆய்வறிக்கையினை வெளியிட்டார்.
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையானது, மீன்களின் நிறம் மற்றும் அவற்றின் வாழ்க்கைச் சூழலில் காணப்படும் மாற்றங்களைக் கண்காணித்துள்ளது.
  • ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப் படி, மீன்களின் நிற வேறுபாடு என்பது உள்ளூர் சூழல் அமைப்புடன் இணைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்