அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கழகமானது பெருந்திரள் உற்பத்தித் தொழில்நுட்பங்களை (மென்பொருள் மற்றும் வன்பொருள்) மேம்படுத்துவதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பங்கள் மருத்துவ சாதனங்கள் உற்பத்தியின் மீது கவனம் செலுத்துகின்றது.
இந்தத் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் அவை நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்பட இருக்கின்றன.
இந்தக் கூட்டிணைவானது தனது சமீபத்திய இரண்டு கண்டுபிடிப்புகளின் மூலம் கோவிட் – 19 தொற்றைத் தடுக்க உதவுகின்றது.
இவை டிஜிட்டல் அகச்சிவப்பு (ஐஆர்) வெப்பமானி மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டல் அலகு ஆகும்.