கால்நடைகளுக்கான ஒரு முழுமையான சுகாதாரக் காப்பீட்டை உருவாக்குவதற்காக 25 மில்லியன் டாலர் மதிப்பிலான G20 பெருந்தொற்று நிதியை மத்திய அரசு செயல் படுத்த உள்ளது.
விலங்கினச் சுகாதார ஆய்வகங்களை நன்கு மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல் மற்றும் ஆய்வக வலையமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நாட்டின் "விலங்கு சுகாதாரப் பாதுகாப்பை" மேம்படுத்துவதற்காக இது வடிவமைக்கப் பட்டு உள்ளது.
இது "விலங்குவழித் தொற்று" நோய்களைக் கண்காணிப்பதற்கும் அவற்றை மிக நன்கு மேலாண்மை செய்வதற்குமான நன்கு ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கும்.
இந்த நிதித் திட்டமானது, ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB), உலக வங்கி மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.