பெரும் எண்ணிக்கையிலான காவல்துறைக்கான சீர்திருத்தங்களை உபயோகிக்கும் முறை - உச்சநீதிமன்றம்
July 7 , 2018 2337 days 679 0
பெரும் எண்ணிக்கையிலான நாட்டில் காவல்துறைக்கான சீர்திருத்தங்களை உபயோகிக்கும் முறைகளுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு அனுமதி அளித்துள்ளது.
இது எல்லா மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஏதேனும் ஒரு காவல்துறை அலுவலரை தற்காலிக காவல்துறை பொது இயக்குநராக நியமிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவில் சாத்தியமான நபர்களை காவல்துறை பொது இயக்குநர் (அ) காவல்துறை ஆணையராக நியமிக்க எல்லா மாநிலங்களையும் மூத்த காவல்துறை அலுவலரின் பெயர்களை UPSC-க்கு (Union Public Service Commission) அனுப்ப கூறியுள்ளது.
இதையொட்டி UPSC மிகவும் பொருத்தமான மூன்று அலுவலர்களைக் கொண்ட பட்டியலை தயாரிக்கும். இதனால் மாநிலங்கள் இயல்பாக அதிலிருந்து ஒருவரை காவல்துறை தலைவராக நியமிக்க இயலும்.
காவல்துறை சீர்திருத்தங்களுக்கான வரலாற்று சிறப்புமிக்க 2006 தீர்ப்பில் ஒரு பகுதியின் திருத்தத்தினை நாடும் மத்திய அரசின் மனுவினை நீதிமன்றம் விசாரித்தது.
செப்டமபர் 22, 2006 அன்று மத்திய அரசிற்கும் பிரகாஷ் சிங்கிற்கும் இடையேயான வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பினை வழங்கியது.
மாநில அளவில் மாநில பாதுகாப்பு குழுவை அமைத்தல்.
குறைந்தபட்ச 2 வருட பதவிகாலம் வகிக்கும் காவல்துறை பொது இயக்குநரின் நியமனத்தின் வெளிப்படையான செயல்முறைகள்.
செயல்பாட்டு கடமைகள் கொண்ட மற்ற காவல்துறை அலுவலர்களான காவல்துறை கண்காணிப்பாளர்களும் குறைந்தபட்சம் 2 வருட பதவிகாலத்தில் இருக்கலாம்.
காவல்துறை கழக ஸ்தாபனத்தினை நிறுவுதல், இந்த ஸ்தாபனம் காவல்துறை அலுவலர்கள் சம்பந்தமான இடமாற்றம், நியமித்தல், பதவி உயர்வு மற்றும் இதர சேவைகள் தொடர்பான முடிவுகளை எடுக்கும்.
மத்திய காவல்துறை அமைப்பின் (CPO - Central Police Organisations) தலைவரைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் வேலைவாய்ப்பிற்கான குழுவினை மத்திய அளவில் தயார் செய்வதற்கு தேசிய பாதுகாப்பு குழுவினை நிறுவுதல்.
புலனாய்வினைப் பிரித்தல், காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகளின் செயல்பாடுகள்.