TNPSC Thervupettagam

‘கான் பிரகாரி ‘செயலி

July 8 , 2018 2203 days 698 0
  • மத்திய நிலக்கரி, இரயில்வே, நிதி & பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் நிலக்கரி சுரங்க கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு (CMSMS - Coal Mine Surveillance & Management System) மற்றும் கைபேசி செயலி ‘கான் பிரகாரி‘ ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
  • இந்த செயலி நிலக்கரி இந்தியா லிட் (Coal India Ltd) மற்றும் பாஸ்கராச்சார்யா விண்வெளி பிரயோகம் மற்றும் புவியியல் - தகவலியல் நிறுவனம் (Bhaskaracharya Institue of Space Application and Geo-informatics - BISAG) ஆகியவற்றின் துணை நிறுவனமான மத்திய சுரங்க திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்பு நிறுவத்தினால் (CMPDI-Central Mine Planning & Design Institute) உருவாக்கப்பட்டதாகும்.
  • CMSMS என்பது அங்கீகரிக்கப்படாத இடங்களில் நடைபெறும் சுரங்க வேலைகளை கண்டுபிடித்துக் காட்டும் வலைதள அடிப்படையிலான புவியியல் தகவலியல் அமைப்பு செயலி ஆகும்.
  • இந்த அமைப்பில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படை தளமானது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் வரைபடம் (நில வரைபடம்) ஆகும். இந்த வரைபடம் கிராமப்புற நிலையிலான தகவல்களை தரும்.
  • கான் பிரகாரி, பக்கத் துளை சுரங்க வேலை, திருட்டு போன்ற சட்ட விரோத நிலக்கரி சுரங்க வேலைகளைப் பற்றிய நடவடிக்கைகளை தெரியப்படுத்தும் ஒரு கருவியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்