TNPSC Thervupettagam

பெரும் பொருளியல் கொள்கைகள் கண்காணிப்புப் பட்டியல்

May 1 , 2018 2400 days 701 0
  • அமெரிக்க கருவூலத் துறையானது, தனது முக்கிய வர்த்தகப் பங்காளிகளை கண்காணிக்கும் பட்டியலில் இந்தியாவை சேர்த்துள்ளது.
  • இந்த சேர்ப்பு அவர்களது நாணய பழக்க வழக்கங்களையும் பெரும் பொருளியல் கோட்பாடுகளையும் கண்காணித்திட உதவும்.
  • இந்த பட்டியலானது அமெரிக்காவின் முக்கிய வர்த்தகப் பங்களிப்பு நாடுகளின் கொள்கைகள் மீதான அரையாண்டு அறிக்கையின் ஒரு பகுதியாகும்.
  • அமெரிக்கக் கருவூலத் துறையானது தமது வர்த்தக நலன்களுக்காக எந்தெந்த நாடுகள் செயற்கையாக தங்களது நாணயத்தின் மதிப்பை மாற்றுகின்றன என்பதைக் கண்டுபிடித்து காங்கிரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
  • இது ஏமாற்று நாணய கையாளுகையை கண்டுபிடித்திட மூன்று அளவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன
    • இருபது பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தகம்
    • அந்நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதம்.
    • ஒரு வருடத்தில் அந்நிய நாணயங்களின் நிகர கொள்முதல் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதம்.
  • இந்தியா, இந்தப் பட்டியலில் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பிறகு சேர்க்கப்பட்ட ஆறாவது நாடாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்