TNPSC Thervupettagam

பெருவின் சான்கே துறைமுகம்

January 27 , 2024 174 days 156 0
  • பெரு நாட்டின் மீன்பிடி நகரமான சான்கேயில் 3.5 பில்லியன் டாலர் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்கடல் துறைமுகம் ஆனது தென் அமெரிக்காவில் உள்ள முதன் முதலில் சீன நாட்டினால் கட்டுப்படுத்தப்பட உள்ள துறைமுகம் ஆகும்.
  • சீனாவின் மண்டலம் மற்றும் சாலை முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
  • இது ஆசிய கண்டத்தின் நாடுகளுக்கு வளங்கள் நிறைந்த இந்தப் பிராந்தியத்திற்கு ஒரு நேரடி நுழைவாயிலை வழங்கும்.
  • சான்கே பெரும் துறைமுகமானது, தென் அமெரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் இடையேயான ஒரு மூலோபாய வணிக மற்றும் துறைமுக மையமாக பெரு நாட்டினை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இலத்தீன் அமெரிக்காவில் உள்ள 22 நாடுகள் உட்பட சுமார் 150 நாடுகள் சீனாவுடன் மண்டலம் மற்றும் சாலைகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • உலகின் தாமிர உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள பெரு அமெரிக்காவுடன் சீனாவை விட சற்று அதிகமான அளவிலான வர்த்தகத்தினை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்