TNPSC Thervupettagam

பெரு - மாஷ்கோ பைரோ பழங்குடியினர்

July 25 , 2024 121 days 245 0
  • ஒரு பழங்குடியின உரிமைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆன சர்வைவல் இன்டர்நேஷனல், உலகின் 100க்கும் மேற்பட்ட தொடர்பில்லாதப் பழங்குடியினரில் ஒன்றான மாஷ்கோ பைரோ பழங்குடியினரின் அரிய படங்களை வெளியிட்டுள்ளது.
  • 750க்கும் அதிகமான எண்ணிக்கையில் காணப்படும் மாஷ்கோ பைரோ, அத்தகைய பழங்குடியினரில் மிகப்பெரியக் குழுவினராக நம்பப் படுகிறது.
  • இந்த நாடோடி வேட்டைக் குழுவினர், பிரேசில் மற்றும் பொலிவியாவுடனான பெருவின் எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள மாட்ரே டி டியோஸ் பிராந்தியத்தின் அமேசான் காடுகளில் வாழ்கின்றனர்.
  • மிகவும் தனிமையில் உள்ள இந்தப் பழங்குடியினர் எப்போதாவது தான் பூர்வீக இனங்களுடன் தொடர்பு கொள்கிறார்கள், ஆனால் இவர்கள் யின் இன மக்களுடன் தொடர்பில் உள்ளனர்.
  • மாஷ்கோ பைரோ பற்றி அறியப்பட்டவற்றில் பெரும்பாலானவை யின் இனத்தவரின் குறிப்புகளில் இருந்து பெறப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்