TNPSC Thervupettagam

பெரோவ்ஸ்கைட் அடிப்படையிலான சாதனங்கள்

January 17 , 2022 952 days 393 0
  • அசாமின் கௌகாத்தியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள், சூரிய ஒளி மின்னழுத்தத் தகடுகளை மிகவும் திறன் மிக்கதாகவும், மலிவானதாகவும், மறுசுழற்சி செய்யக் கூடியதாகவும் மாற்றுவதற்கான வழியைக் கண்டறிந்துள்ளனர்.
  • மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குக் கலப்பின பெரோவ்ஸ்கைட் அடிப்படையிலான சூரிய ஒளி மின்னழுத்தச் சாதனங்களை உறுதிப்படுத்துவதன் மூலம் இது செய்யப் பட்டது.
  • இவை மலிவானவை மற்றும் உற்பத்தி செய்ய எளிதானவை என்பதால் இவை அதிக அளவில் பயன்படுத்தப்படும் குறை கடத்திகளாகக் கருதப் படுகின்றன.
  • பெரோவ்ஸ்கைட் பொருட்கள் அவற்றின் சுற்றுப்புற (ஈரப்பதம் மற்றும் ஆக்ஸிஜன்) சூழல்களில் மிகவும் நிலையற்றதாக இருப்பதால் இவற்றின் வணிகமயமாதல் மட்டுப் படுத்தப் படுகின்றன.
  • இந்தச் சாதனங்களை அறை வெப்பநிலையில் தயாரிக்க முடிவதனால் அவை செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக வகையில் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்