TNPSC Thervupettagam

பெர்னார்டினெல்லி - பெர்ன்ஸ்டீன் வால் நட்சத்திரம்

April 20 , 2022 859 days 453 0
  • சமீபத்தில், நாசா நிறுவனத்தின் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியானது, மிகப் பெரிய பெர்னார்டினெல்லி-பெர்ன்ஸ்டீன் என்ற வால் நட்சத்திரம் என்பது வானியல் அறிஞர்களால் இதுவரை கண்டறியப்படாத ஒரு மிகப்பெரிய பனித்துகள்களால் ஆன ஒரு வால் நட்சத்திரக் கரு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
  • இந்த அணுக்கரு C/2014 UN271 என அழைக்கப்படுவதோடு இது சுமார் 129 கிலோமீட்டர் விட்டம் கொண்டது.
  • இந்தக் கருவானது இதுவரை கண்டறியப்பட்ட வால் நட்சத்திரங்களைக்  காட்டிலும் 50 மடங்கு பெரியதாக இருப்பதோடு அதன் நிறையானது, சுமார் 500 டிரில்லியன் டன்கள் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • இந்த வால் நட்சத்திரமானது, பெட்ரோ பெர்னார்டினெல்லி மற்றும் கேரி பெர்ன்ஸ்டீன் ஆகியோரால் சிலியில் உள்ள ஒரு வானியல் ஆய்வகத்தில் டார்க் எனர்ஜி மதிப்பீட்டில் (Dark Energy Survey) இருந்து பெறப்பட்ட சேமிப்புப் படங்களில் இருந்து கண்டுபிடிக்கப் பட்டது.
  • இது 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது முதல் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்