உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு, இலக்கியம் மற்றும் கலைப் படைப்புகளின் பாதுகாப்பிற்கான பெர்னே உடன்படிக்கையோடு தொடர்பு கொண்ட 1971 ஆம் ஆண்டின் பாரிஸ் சட்டத்தின் பிற்சேர்க்கையின் விதி II மற்றும் விதி III ஆகியவற்றோடு தொடர்புடைய இந்தியா சமர்ப்பித்த தீர்மானத்தை உலகிற்கு தெரியப் படுத்தியுள்ளது.
இந்தத் தீர்மானம் இந்தியாவிற்கென்று 2018ம் ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
இந்தத் தீர்மானம், அக்டோபர் 10, 2024ம் ஆண்டு முடிவடையும் பத்தாண்டு காலத்தில் பெர்னே உடன்படிக்கையில் கூறியுள்ளவாறு இந்தியா அதன் நிபுணர்களை பயன்படுத்திட இயலச் செய்திடும்.
1928-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தியா இந்த அமைப்பின் உறுப்பினராக உள்ளது.
பெர்னே ஒன்றியம் என்று அழைக்கப்படும் இலக்கிய மற்றும் கலைப் படைப்புகளின் பாதுகாப்பிற்கான பெர்னே உடன்படிக்கை தன் உறுப்பு நாடுகளால் காப்புரிமை பெற்ற படைப்புகளை சமமாக நடத்துவதற்கான ஒரு சர்வதேச காப்புரிமை ஒப்பந்தமாகும்.
இது 1886-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பெர்னேவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தம் தன் உறுப்பு நாடுகள் எவ்வாறு அதன் தேசிய காப்புரிமைகள் அங்கீகரிக்கப்படுகின்றதோ அதைப் போலவே காப்புரிமை பெற்ற இலக்கிய மற்றும் கலை படைப்புகளை அங்கீகரிக்க வேண்டுகிறது.