பெர்ம் நீர்மூழ்கிக் கப்பல்
April 8 , 2025
12 days
69
- அதிபர் விளாடிமிர் புதின், மீயொலி சிர்கான் எறிகணைகள் பொருத்தப்பட்ட பெர்ம் என்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை தொடங்கி வைத்தார்.
- சிர்கான் ஆனது ஒலியை விட பல மடங்கு வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.
- சிர்கான் எறிகணைகள் சுமார் 900 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டுள்ளன என்பதோடு மேலும் அவற்றைத் தடுத்து எதிர்ப்பதும் கடினமாகும்.
- செவ்மாஷ் என்ற கப்பல் கட்டும் தளத்தால் கட்டப்பட்ட இந்தப் பெர்ம் கப்பலானது, இந்த எறிகணைகளை ஒரு தரநிலையிலான ஆயுதமாகக் கொண்ட அதன் வகுப்பில் முதன்மையானது.

Post Views:
69