TNPSC Thervupettagam

பெலுடா மற்றும் Crispr தொழில்நுட்பம்

May 3 , 2020 1670 days 786 0
  • இது அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் மரபணுவியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியியல் மையத்தை (CSIR – IGIB/ Institute of Genomics and Integrative Biology) சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது புதிய கொரானா வைரஸ் தொற்றை 1 மணி நேரத்திற்குள் கண்டறியும் வகையில் விலை குறைந்த மற்றும் காகிதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோதனையாகும்.
  • இச்சோதனையானது cas9 என்று அழைக்கப்படும் ஒரு பாக்டீரிய நோய் எதிர்ப்பு அமைப்புப் புரதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
  • இது வளர்ந்து வரும் தொழில்நுட்பமான மரபணு தொகுத்தல் கூறான Crispr-Cas9 என்ற முறையைப் பயன்படுத்துகின்றது. 
  • CRISPR தொழில்நுட்பமானது அடிப்படையில் மரபணுத் தொகுத்தல் தொழில்நுட்பம் ஆகும்.
  • இது ஒரு உயிரினத்தின் மரபணுவை மாற்றுதல் அல்லது மரபணுவின் செயல்பாடுகளை மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
  • இந்தத் தொழில்நுட்பமானது முழுமையான மரபணுக் குறியின் குறிப்பிட்ட பகுதியை இலக்காகக் கொள்ள அல்லது குறிப்பிட்ட பகுதியில் டிஎன்ஏ-வைத் தொகுப்பதற்காகப் பயன்படுத்தப் படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்