TNPSC Thervupettagam

பெல்காம் அமர்வின் 100வது ஆண்டு நிறைவு

December 28 , 2024 25 days 133 0
  • காங்கிரஸ் தலைவர்கள் 1924 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க காங்கிரஸ் மாநாட்டிற்கு மகாத்மா காந்தி அவர்கள் தலைமை தாங்கிய நிகழ்வின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகின்றனர்.
  • 1924 ஆம் ஆடனில் பெல்காம் நகரில் நடைபெற்ற அமர்வு ஆனது, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.
  • காங்கிரஸ் தலைவராக ஓர் அமர்விற்கு மகாத்மா காந்தி அவர்கள் தலைமை வகித்த ஒரே அமர்வு அதுவேயாகும்.
  • காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை இடைநிறுத்த வழி வகுத்த 1922 ஆம் ஆண்டு சௌரி சௌரா சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அமர்வு நடைபெற்றது.
  • இது மோதிலால் நேரு மற்றும் C.R.தாஸ் தலைமையிலான சுராஜ்ஜிய தரப்பினருக்கும், காந்தியின் அகிம்சையான எதிர்ப்பு என்ற கொள்கையினை ஆதரித்த மாற்றத்தை விரும்பாத தரப்பினருக்கும் இடையே கட்சியில் பிளவை ஏற்படுத்தியது.
  • இந்த அமர்வின் போது, ​​காந்தி அவர்கள் அகிம்சை, மத நல்லிணக்கம் மற்றும் "சுய ராஜ்ஜியம்" பற்றிய தனது கருத்துக்களை முன்வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்