பெஹ்டியன்க்ஹலம் விழா என்பது பினெர் (Pnar) என்ற பழங்குடி மக்களிடையே மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் கலாச்சார விழா ஆகும்.
பெஹ்டியன்க்ஹலம் என்பது (காலரா நோய் அரக்கனை துரத்துவது) ஜூலை மாதத்தில், ஜெயின்டியா பழங்குடியினரின் விதைப்புக் காலத்திற்குப் பிறகு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நடனத்திருவிழா.
இந்தப் பண்டிகை மிகுந்த விளைச்சல் மற்றும் நோய் இல்லா வாழ்க்கைக்காக கடவுளை அழைத்து, வேண்டுவதற்காக கொண்டாடும் பண்டிகை ஆகும்.
இந்த நடனத்தில் பெண்கள் பங்கேற்பது இல்லை. இத்திருவிழாவின் பொழுது பெண்கள் தங்கள் முன்னோர்களின் ஆத்மாவிற்கு படையலிட்டு உணவளிக்கும் பணியைச் செய்கிறார்கள்.