பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பில் 1,036 இனங்கள் பதிவு
March 10 , 2024 259 days 327 0
நாடு முழுவதிலுமிருந்து கணக்கெடுப்பில் பங்கு பெற்ற பறவை ஆர்வலர்கள் 2024 ஆம் ஆண்டு பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பில் சுமார் 1036 பறவை இனங்களை ஆவணப் படுத்தியுள்ளனர்.
பறவைகளின் மீதான பன்முகத் தன்மையை ஆவணப்படுத்துவதற்கான உலகளாவிய குடிமக்கள் அறிவியல் முன்னெடுப்பில் இந்தியா 1,000க்கும் மேற்பட்ட கணக்கெடுப்பு பட்டியலைச் சமர்ப்பித்துள்ளது.
இது உலகிலேயே இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான சமர்ப்பித்தல் ஆகும்.
இந்தியா இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான சரிபார்ப்புப் பட்டியலினை சமர்ப்பித்துள்ளது என்பதோடு இது இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற அனைத்து நாடுகளிலும் மூன்றாவது அதிகமான இனங்கள் கொண்ட பட்டியல் ஆகும்.
அமெரிக்கா 172,025 இனங்களுடன் கூடிய சரிபார்ப்புப் பட்டியலைச் சமர்ப்பித்தது.
அதைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்திலும், 25,420 இனங்களுடன் கனடா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
கொலம்பியா (1,363) மற்றும் ஈக்வடார் (1,130) அதிக இனங்களை சமர்ப்பித்துள்ளன.
கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான இனங்களைப் பதிவு செய்துள்ளது (14,023) என்ற நிலையில் அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (13,661) மற்றும் மகாராஷ்டிரா (5,725) ஆகியவை உள்ளன.
பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பானது ஒவ்வோர் ஆண்டும், வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் நான்கு நாட்களுக்கு நடைபெறும்.