பேங்கர்ஸ் இதழின் ஆண்டின் சிறந்த வங்கியாளர் விருது
December 9 , 2022
591 days
308
- இலண்டனில் நடைபெற்ற உலக வங்கி உச்சி மாநாட்டில் இந்தியப் பிரிவிற்கான ‘பேங்கர்ஸ் இதழின் 2022 ஆம் ஆண்டின் சிறந்த வங்கியாளர் விருதினை' கனரா வங்கி பெற்றது.
- பேங்கர்ஸ் இதழின் ஆண்டின் சிறந்த வங்கியாளர் விருதுகள் ஆனது வங்கித் துறைக்கான ஆஸ்கார் விருதாக கருதப்படுகிறது.
- உலகெங்கிலும் உள்ள 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான முதன்மையான உலகளாவிய வங்கி மற்றும் நிதி ஆதாரமாக பேங்கர்ஸ் இதழ் திகழ்கிறது.
- கனரா வங்கியானது 1906 ஆம் ஆண்டில் மங்களூருவில் அம்மேம்பாள் சுப்பா ராவ் பாய் என்பவரால் நிறுவப்பட்டது.
- இந்த வங்கியின் அலுவலகங்கள் இலண்டன், துபாய் மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களிலும் அமைந்துள்ளன.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture1060.jpg)
Post Views:
308