பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ: நாமக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள்
September 7 , 2019 1962 days 1105 0
2014-15 ஆம் ஆண்டில் 918 புள்ளிகளாக இருந்த பாலின விகிதம் 2018-19 ஆம் ஆண்டில் 13 புள்ளிகள் அதிகரித்து 931 புள்ளிகளாக உள்ளது என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி தெரிவித்துள்ளார்.
பிறப்பின் போது பாலின விகிதத்தை மேம்படுத்தியதற்காக பத்து மாவட்டங்கள் கௌரவிக்கப்பட்டன.
இந்தப் பிரிவில் சிறப்பாகச் செயல்படும் மாவட்டங்களில் ஒன்றாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாமக்கல் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ (Beti Bachao Beti Padhao - BBBP) திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை உருவாக்குவதில் சிறப்பாக செயல்பட்டதற்காகப் பத்து மாவட்டங்கள் கௌரவிக்கப்பட்டன.
இந்தப் பிரிவில் சிறப்பாகச் செயல்படும் மாவட்டங்களில் ஒன்றாக திருவள்ளூர் மாவட்டம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.