பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ”பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ” திட்டத்தை” அனைத்திந்திய அளவில், அதாவது 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நாடு முழுவதும் உள்ள 640 மாவட்டங்களிலும் விரிவுபடுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டம் நாட்டின் 161 மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து, தற்போது அனைத்திந்திய அளவில் செயல்படுத்துவதற்காக விரிவுபடுத்தப்பட உள்ளது.
பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ
இத்திட்டமானது 2015-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
பாலின வேறுபாடு மிகுந்துள்ள மாவட்டங்களில் குறைந்து வரும் குழந்தைகள் பாலின விகிதத்தை (Child sex ratio) தடுப்பதற்காகவும், பெண்கள் மேம்பாட்டோடு தொடர்புடைய பிரச்சனைகளை களைவதற்காகவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
தற்போது நடப்பில் இத்திட்டமானது மூன்று அமைச்சகங்களின் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்படுகின்றது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
இத்திட்டம் தற்போது மோசமான குழந்தைகள் பாலின விகிதமுடைய (CSR) 161 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் பிற நோக்கங்கள்
பாலினம் சார்புடைய குழந்தை பாலினத் தேர்வு நீக்கலை தடுத்தல் (Prevent Gender based Sex-selective elimination).
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் உயிர் வாழ்தலை உறுதி செய்தல்
பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்தல்.
இத்திட்டமானது 1994- ன் முன்-கருத்தரித்தல் மற்றும் முன்கூட்டியேயான குழந்தைகள் பாலின கண்டறிதல் தொழிற்நுட்ப சட்டத்தின் (Pre-Conception & Pre-Natal Diagnostic Technique Act 1994) சரியான செயல்படுத்தலை உறுதி செய்ய உதவும்.
குழந்தைகள் பாலின விகிதம் (CSR) என்பது 0 முதல் 6 வயது வரையிலானவர்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு எத்தனை பெண் குழந்தைகள் உள்ளனர் என்ற எண்ணிக்கையாகும்.
1961ல் 976 ஆக இருந்த CSR ஆனது, 2011 கணக்கெடுப்பின் படி 918 ஆக குறைந்துள்ளது.