TNPSC Thervupettagam

பேப்லெஸ் சில்லு வடிவமைப்பு காப்பகம்

August 25 , 2018 2284 days 707 0
  • சில்லு வடிவமைப்புத் துறையில் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு உதவுவதற்காக பிரத்யேகமான பேப்லெஸ் சில்லு வடிவமைப்பு காப்பகத்தை (Fabless Chip Design Incubator - FabCI) ஹைதராபாத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT – Indian Institute of Technology) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதன் இலக்கு உலக அளவில் போட்டியிடக்கூடிய மற்றும் அறிவுசார் சொத்து உரிமைகளை உருவாக்கக்கூடிய குறைந்தது 50 ‘இந்தியாவில் தயாரிக்கும்’ சில்லு வடிவமைப்பு நிறுவனங்களை ஒன்று திரட்டுவதாகும்.
  • இந்தியாவில் பேப்லெஸ் சில்லு வடிவமைப்பு காப்பகத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும். இது சில்லு வடிவமைப்பில் ஈடுபடும் புதிய நிறுவனங்களை சீர்படுத்துவதற்கான சூழலை உருவாக்குவதில் கவனத்தை செலுத்தும்.
  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Meity - Ministry of Electronic and Information Technology) FabCI-ற்கு நிதி அளிக்கும். கேடன் டிசைன்ஸ் சிஸ்டம்ஸ், இன்க் மற்றும் ‘மென்டோர் கிராபிக்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இதன் தொழில்நுட்ப பங்கீட்டு நிறுவனங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்