TNPSC Thervupettagam

பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கல்

March 11 , 2022 865 days 445 0
  • ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளியான AG பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
  • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
  • இவர் இதுவரையில், 32 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார்.
  • 2014 ஆம் ஆண்டில் இரண்டு இலங்கைத் தமிழர்களான முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருடன் இவருக்கும் சேர்த்து உச்ச நீதிமன்றமானது, அவர்களின் கருணை மனுக்கள் மீதான முடிவினை நீண்ட நாள் மேற்கொள்ளாததால் அவர்களது மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது.
  • 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் குழுவானது இந்திய அரசியலமைப்பின் விதி 161 (மன்னிக்கும் அதிகாரம்) என்பதின் கீழ் ஆளுனரிடம் பேரறிவாளனின் விடுதலையினைப் பரிந்துரை செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்