ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளியான AG பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
இவர் இதுவரையில், 32 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டில் இரண்டு இலங்கைத் தமிழர்களான முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருடன் இவருக்கும் சேர்த்து உச்ச நீதிமன்றமானது, அவர்களின் கருணை மனுக்கள் மீதான முடிவினை நீண்ட நாள் மேற்கொள்ளாததால் அவர்களது மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது.
2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் குழுவானது இந்திய அரசியலமைப்பின் விதி 161 (மன்னிக்கும் அதிகாரம்) என்பதின் கீழ் ஆளுனரிடம் பேரறிவாளனின் விடுதலையினைப் பரிந்துரை செய்தது.