TNPSC Thervupettagam
December 28 , 2021 939 days 527 0
  • தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிரான நாயகரும், நாட்டின் ஒரு தார்மீக திசை காட்டி என்று வர்ணிக்கப்பட்டவருமான பேராயர் டெஸ்மண்ட் டுட்டு, சமீபத்தில் காலமானார்.
  • அவரது எளிதான நகைச்சுவை மற்றும் சிறப்பியல்பு மிக்க புன்னகைக்காகவும், எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து வண்ணத்தினரின் சமுதாயம் சார்ந்த அநீதிகளுக்கு எதிராக அவர் ஆற்றிய அயராதப் போராட்டங்களுக்காகவும் வேண்டி அவர் நினைவு கூறப்படுகிறார்.
  • தென்னாப்பிரிக்காவில் வெள்ளைச் சிறுபான்மைச் சமுதாயத்தினரின் ஆட்சியை எதிர்த்துப் போராடியதற்காக 1984 ஆம் ஆண்டில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • 1994 ஆம் ஆண்டில் நெல்சன் மண்டேலா அவர்கள் அந்த நாட்டின் முதல் கறுப்பின அதிபரான போது, தென்னாப்பிரிக்காவை விவரிக்கும் வகையில் "வானவில் தேசம்" என்ற ஒரு வார்த்தையை அவர் உருவாக்கினார்.
  • அமெரிக்க நாட்டின் முதல் கறுப்பினத் தலைவரும், அமெரிக்காவின் முன்னாள் அதிபருமான பாரக் ஒபாமா, டுட்டுவை ஒரு "தார்மீக திசைகாட்டி" (moral compass) என்று பாராட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்