பேரிடரைத் தாங்கக் கூடிய நெகிழ்திறன்மிக்க உள்கட்டமைப்பிற்கான கூட்டணியில் ஐரோப்பிய முதலீட்டு வங்கி
July 30 , 2022 724 days 332 0
ஐரோப்பிய முதலீட்டு வங்கியானது, சமீபத்தில் பேரிடரைத் தாங்கக் கூடிய நெகிழ் திறன் மிக்க உள்கட்டமைப்பிற்கான கூட்டணியில் இணைந்துள்ளது.
இந்தக் கூட்டணியானது இந்தியாவின் தலைமையில் இயங்குகிறது.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவைக் கட்டுப்படுத்தச் செய்யும் நோக்கில் இந்தக் கூட்டணியானது நிறுவப் பட்டுள்ளது.
ஐரோப்பிய முதலீட்டு வங்கியானது இந்தக் கூட்டணியின் உறுப்பினர் நாடுகளுக்கு ஆலோசனை மற்றும் நிதி உதவியை வழங்கும்.
ஐரோப்பிய முதலீட்டு வங்கியானது இந்தக் கூட்டணியில் "ஐரோப்பிய ஒன்றியப் பருவ நிலை வங்கியாக" செயல்படும்.
பேரிடரைத் தாங்கக் கூடிய நெகிழ்திறன்மிக்க உள்கட்டமைப்பிற்கான கூட்டணி, 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பருவநிலை நடவடிக்கைக்கான உச்சி மாநாட்டில் இந்திய நாட்டினால் தொடங்கப் பட்டது.
இது உறுப்பினர் நாடுகளுக்கு அறிவுசார்ந்த தகவல்கள் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய நாடுகளுக்கு உதவவும் வேண்டி வழி வகுக்கிறது.
ஐரோப்பிய முதலீட்டு வங்கி என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீட்டு வங்கியாகும்.
இதன் உரிமம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகளிடம் உள்ளது.