TNPSC Thervupettagam

பேரிடர் ஆபத்து குறைப்பு தரவுதளம்

May 5 , 2018 2270 days 714 0
  • தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமானது (National Disaster Management Authority-NDMA) பேரிடர் ஆபத்து குறைப்பு தரவுதளத்திற்கான (Disaster Risk Reduction Database) தரவு, தேவைகள் மீது இரு நாள் தேசிய பயிற்சி பட்டறையை நடத்தியுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (United Nations International Children’s Emergency Fund-UNICEF) ஐ,நா. வளர்ச்சி திட்டம் (UN Development Programme -UNDP), பேரிடர் குறைப்பிற்கான ஐ,நா. வின் சர்வதேச உத்திகள் அமைப்பு (UN International Strategy for Disaster Reduction-UNISDR) ஆகியவற்றுடன் கூட்டிணைந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த பயிற்சி பட்டறையினை நடத்தியுள்ளது.
  • பேரிடர் ஆபத்து குறைப்பு தரவுத்தளமானது 2016-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் நடைபெற்ற பேரிடர் ஆபத்து குறைப்பு மீதான ஆசிய அமைச்சர்கள் மாநாட்டின் போது (Asian Ministerial Conference on Disaster risk Reduction -AMCDRR) வரையறுக்கப்பட்ட பேரிடர் ஆபத்துகளை களைவதற்கான பிரதமரின் 10 குறிப்பு நிரல்களை (Prime Minister’s 10-point agenda) அமல்படுத்துவதை முன்நோக்கிய ஓர் முக்கிய அடியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்