- பேரிடர் ஆபத்து குறைப்பு (Disaster Risk Reduction) மீது பரிந்துரைகளை வழங்க மத்திய உள்துறை அமைச்சகமானது (Home Ministry) ஓர் செயற் பணிப்படையை (task force) அண்மையில் அமைத்தது.
- தற்போது இந்த செயற் பணிப்படையானது பேரிடர் ஆபத்து குறைப்பு மீது தன்னுடைய அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சமர்ப்பித்துள்ளது.
- மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகத்தின் (Ministry of External Affairs) கிழக்குப் பிரிவு செயலாளரான பிரித்தி சரண் இந்த செயற் பணிப்படையின் தலைவராவார்.
- பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பு மீது கூட்டிணைவை (Coalition on Disaster Resilient Infrastructure) ஏற்படுத்துதல் மீதான இந்த அறிக்கையானது, பேரிடர் ஆபத்து குறைப்பிற்கென ஓர் கூட்டிணைவை உருவாக்குவதோடு அவற்றை செயல்படுத்துவதற்காக (operationalize) படிப்படியான அமல்பாட்டு திட்டங்களையும் (implementation plan) அதற்கான ஆய்வுகளையும் வழங்குகின்றது.
பேரிடர் ஆபத்து குறைப்பு மீதான ஆசிய அமைச்சர்கள் மாநாடு
- பேரிடர் ஆபத்து குறைப்பு மீதான ஆசிய அமைச்சர்கள் மாநாடு (Asian Ministerial Conference on Disaster Risk Reduction -AMCDRR) அண்மையில் புது தில்லியில் நடைபெற்றது.
- இம்மாநாட்டில் பேரிடர் ஆபத்து குறைப்பிற்காக 10 குறிப்புகள் உடைய நிரல்கள் (10-point agenda) வரையறுக்கப்பட்டுள்ளன.
- இதனுடைய முதல் நிரலின் கீழ், ஆசியப் பிராந்தியத்தின் பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்புகளை (disaster resilient infrastructure) மேம்படுத்துவதற்காக, ஓர் பேரிடர் ஆபத்து குறைப்பு கூட்டணியையோ அல்லது மையத்தையோ கட்டமைக்க பிற கூட்டளிப்பு நாடுகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து இந்தியா செயல்படும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.