TNPSC Thervupettagam

பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, 2024

August 10 , 2024 108 days 177 0
  • 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆனது பேரிடர்களைத் திறம்பட மேலாண்மை செய்வதற்காக இயற்றப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதாவானது மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • இந்த மசோதாவானது "தேசிய மற்றும் மாநில அளவிலான பேரிடர் தரவுத் தளத்தினை" உருவாக்க முயல்கிறது.
  • டெல்லி மற்றும் சண்டிகர் ஒன்றியப் பிரதேசங்களைத் தவிர, மாநிலத் தலைநகரங்கள் மற்றும் பெரிய நகரங்களைக் கொண்ட மாநகராட்சிக் கழகங்களுக்கு "நகர்ப்புறப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தினை" அமைப்பதற்கும் இது வழிவகை செய்கிறது.
  • அதிகரித்து வரும் பேரிடர் அபாயங்கள் உட்பட, நாட்டில் ஏற்படும் அனைத்து வகையான பேரழிவு அபாயங்களை அவ்வப்போது கணக்கெடுப்பதற்கு பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
  • இது "நடந்திருக்காத ஆனால் தீவிரப் பருவநிலை நிகழ்வுகள் மற்றும் பல்வேறு பிற காரணிகளால் எதிர்காலத்தில் ஏற்படக் கூடியப் பேரழிவுகளின் அபாயங்கள்" போன்ற சிலவற்றை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்