சமீபத்தில் ரஷ்ய அறிவியலாளர்கள் பைக்கால் – GVD (Gigaton Volume Detector) எனப்படும் நீருக்கு அடியில் அமைந்த உலகின் மிகப்பெரிய நியூட்ரினோ தொலைநோக்கியை பைக்கால் ஏரியில் அமைத்தனர்.
பைக்கால் ஏரி சைபீரியாவில் அமைந்துள்ள உலகின் மிகவும் ஆழமான ஏரியாகும்.
இது உலகிலுள்ள நியூட்ரினோக்களைக் கண்டறியும் மூன்று மிகப்பெரிய தொலைநோக்கிகளுள் ஒன்றாகும்.
மற்ற இரண்டு தொலை நோக்கிகள்,
தென் துருவத்தில் அமைந்துள்ள ஐஸ்கியூப் (Ice cube) மற்றும்
மத்தியத் தரைக்கடலில் அமைந்துள்ள (ANTARES) அன்டாரீஸ் ஆகியனவாகும்.
இந்தத் தொலைநோக்கி நியூட்ரினோக்கள் எனப்படும் கண்ணுக்குப் புலப்படாத அடிப்படைப் பொருட்களை (துகள்களை) விரிவாக ஆய்வு செய்யவும் அதற்கான மூலப்பொருளைத் தீர்மானிக்கவும் உள்ளது.