TNPSC Thervupettagam
November 29 , 2018 2188 days 674 0
  • வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகமானது மலிவான கடன் வசதி மற்றும் வட்டி உதவித் தொகை அணுகலுக்காக (PAiSA) பைசா என்ற தளத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது புதுடெல்லியில் நடைபெற்ற மாநகராட்சி நிதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் மீதான தேசிய பயிற்சிப் பட்டறையின் போது தொடங்கப்பட்டது.
  • பைசா என்பது மலிவான கடன் வசதி மற்றும் வட்டி உதவித் தொகைக்கான அணுகலுக்கான தளம் (Portal for Affordable Credit and Interest Subvention Access - PAiSA) என்பதன் சுருக்கமாகும்.
  • இது தீனதயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் (DAY – NULM/ Deendayal Antyodaya Yojana – National Urban Livelihoods Mission) கடன்களை விரைவாக செயலாக்கம் செய்வதற்காக அமைக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட மின்னணு தளமாகும்.
  • இது பயனாளிகளை நேரடியாக இணைப்பதையும் சேவைகளை வழங்குவதில் அதிக அளவிலான செயல்திறன் கொண்டிருப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இந்த திட்டத்தின் முதன்மை வங்கியான அலகாபாத் வங்கியால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டடது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்