TNPSC Thervupettagam

பைபர்ஜாய் புயல்

June 19 , 2023 397 days 342 0
  • அரபிக்கடல் பரப்பின் மீதான 10 நாள் நகர்விற்குப் பிறகு பைபர்ஜாய் என்ற தீவிரப் புயல் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடந்தது.
  • இந்தப் புயலுக்கு "பேரழிவு" என பொருள்படும் பெங்காலி வார்த்தையான பைபர்ஜாய் என வங்கதேசத்தால் பெயரிடப்பட்டது.
  • ஜூன் 04 ஆம் தேதி தொடங்கிய இந்தப் புயல் ஜூன் 15 ஆம் தேதியன்று நிலப் பகுதியினை அடையும் முன் 10 நாட்களுக்கு அரபிக்கடலில் வடக்கு நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
  • அரபிக்கடலில் அதிக நாட்கள் மையம் கொண்டப் புயலாக பைபர்ஜாய் புயல் மாறி உள்ளது.
  • வெப்பமிக்க கடல் மேற்பரப்பின் வெப்பநிலையானது அரபிக்கடலில் ஏற்பட்ட மற்றப் புயல்களை விட பைபர்ஜோய் புயல் நீண்ட காலம் நீடிக்க உதவியது என்று அறிவியல் அறிஞர்கள் நம்புகின்றனர்.
  • மார்ச் மாதத்தில் இருந்து அரபிக் கடல் கிட்டத்தட்ட 1.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அடைந்துள்ளது.
  • எனவே, இப்புயல் விரைவாக தீவிரமடைந்ததிற்குத் தேவையான சூழ்நிலைகள் மிகவும் சாதகமாக இருந்ததால், அது நீண்ட காலத்திற்கு அதன் வலிமையைத் தக்க வைக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தது.
  • இதற்கு முன்னதாக, 2019 ஆம் ஆண்டில், அரபிக்கடலில் ஏற்பட்ட 2019 ஆம் ஆண்டின் அதி தீவிர கியார் புயல் 9 நாட்கள் மற்றும் 15 மணி நேரம் மையம் கொண்டிருந்தது.
  • 2018 ஆம் ஆண்டு தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான அதி தீவிர புயலான கஜா புயல் 9 நாட்கள் 15 மணி நேரம் மையம் கொண்டிருந்தது.
  • 1965 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் ஜூன் மாதத்தில் மேற்கத்திய மாநிலத்தைத் தாக்கிய மூன்றாவது புயல் பைபர்ஜாய் ஆகும்.
  • ஜூன் மாதத்திற்கான 1965 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான தரவுகளின் அடிப்படையில், அரபிக் கடலில் 13 புயல்கள் உருவாகியுள்ளன.
  • இவற்றில் இரண்டு குஜராத் கடற்கரையையும் (1996&1998), ஒன்று மகாராஷ்டிரா கடற் கரையையும், ஒன்று பாகிஸ்தான் கடற்கரையையும், மூன்று ஓமன்-ஏமன் கடற் கரைகளையும் கடந்ததோடு மற்றும் ஆறு புயல்கள் கடல் பரப்பில் வலுவிழந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்