ஆந்திரப் பிரதேச மாநிலம் அமராவதியில் ஆந்திரப் பிரதேச அரசின் பைபர் கிரிட் (Fibre Grid) திட்டத்தை குடியரசுத் தலைவர் முறையாக தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவால் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தை ஆந்திராவின் மாநில பைபர்நெட் நிறுவனம் (Andhra Pradesh State Fibernet Limited-APSFL) செயல்படுத்த உள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் மாநில பைபர்நெட் நிறுவனமானது இந்தியாவின் மிகப்பெரிய, மாநில அரசினால் (state government-owned) நிர்வகிக்கப்படும் தொலைத்தொடர்பு நிறுவனமாகும்.
மாநிலம் முழுவதும் அதிவேக இணையதள வசதியை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.