TNPSC Thervupettagam

பை தினம் - மார்ச் 14

March 15 , 2024 127 days 154 0
  • இந்தத் தினத்திற்கான தேதியை மாதம் மற்றும் தேதி என்ற வடிவத்தில் எழுதினால், அது பை (π) மதிப்பின் முதல் மூன்று இலக்கங்களுடன் பொருந்துகிறது.
  • பை என்பது வட்டத்தின் சுற்றளவுக்கும் விட்டத்திற்கும் உள்ள ஒரு விகிதமாகும்.
  • இந்த விகிதத்தின் மதிப்பு 3.14 PI என்ற மாறிலியாகும்.
  • பையின் நிலையான மதிப்பை சைராகுஸ் நகரினைச் சேர்ந்த ஆர்க்கிமிடிஸ் என்ற கணிதவியலாளர் முதன் முதலில் கணித்தார்.
  • 1737 ஆம் ஆண்டில், லியோன்ஹார்ட் ஆய்லர் என்பவர் பையின் குறியீட்டினைப் பயன்படுத்தினார், எனவே அது அறிவியல் சமூகத்தில் பயன்பாட்டிற்கு ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • 1988 ஆம் ஆண்டில், அமெரிக்க இயற்பியலாளர் லாரி ஷா என்பவர் முதலாவது பை தினத்தைக் கொண்டாடினார்.
  • தற்செயலாக, புகழ்பெற்ற இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளன்று பை தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்