பொங்கல் காலப் பறவைகள் கணக்கெடுப்பு ஆனது, Tamil Birders Network மற்றும் இந்தியப் பறவைகள் கணக்கெடுப்பு ஆகிய அமைப்புகளால் ஒருங்கிணைந்து மேற் கொள்ளப் பட்டது.
இது தமிழ்நாடு மாநிலத்திற்கான வருடாந்திரப் பறவைகள் கண்காணிப்பு செயல்பாடு ஆகும்.
இது முதன்முதலில் 2015 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது என்பதோடு இந்த ஆண்டு மேற் கொள்ளப் பட்ட கணக்கெடுப்பானது 10வது பறவைகள் கணக்கெடுப்பு என்பதனைக் குறிக்கிறது.
இது தமிழ்நாட்டின் பறவைகளின் பரவல் மற்றும் மிகுதியின் தகவலை அறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு பறவைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது (332) என்பதோடு கடந்த ஆண்டு மொத்தம் 345 பறவை இனங்கள் பதிவாகின.