மூத்த காங்கிரஸ் தலைவர் K.C.வேணுகோபால், தலைமையிலான பொதுக் கணக்குக் குழு (PAC) ஆனது சமீபத்தில் நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் அதன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
'Excesses over voted grants and charged appropriations - வாக்களிக்கப்பட்ட மானியங்கள் மற்றும் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்குப் பிறகு மிஞ்சிய நிதிகள் (2021-22)' என்ற தலைப்பில் இந்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, பாதுகாப்பு, இரயில்வே மற்றும் இரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகங்கள் ஆனது 2021-22 ஆம் ஆண்டிற்குப் பாராளுமன்றம் அனுமதித்த நிதி ஒதுக்கீடுகளை விட அதிகமாக 1,291.14 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
2021-22 ஆம் நிதியாண்டில், மொத்தம் 1,291.14 கோடி ரூபாய் நிதி அமைச்சகத்தினால் (742.56 கோடி ரூபாய்) செலவிடப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் ஆனது (493.38 கோடி ரூபாய்), இரயில்வே அமைச்சகம் (55.16 கோடி ரூபாய்), பாதுகாப்பு அமைச்சகம் (3.17 கோடி ரூபாய்) செலவிட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஏற்கனவே கணிசமான துணை (கூடுதல்) மானியங்களைப் பெற்றுள்ளன.
0.67% முதல் 10.41% வரையிலான அதிக செலவின வீதத்தில் மிகையான செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டன.