TNPSC Thervupettagam

பொதுக் கணக்குக் குழு அறிக்கை 2024

December 30 , 2024 60 days 111 0
  • மூத்த காங்கிரஸ் தலைவர் K.C.வேணுகோபால், தலைமையிலான பொதுக் கணக்குக் குழு (PAC) ஆனது சமீபத்தில் நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் அதன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
  • 'Excesses over voted grants and charged appropriations - வாக்களிக்கப்பட்ட மானியங்கள் மற்றும் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்குப் பிறகு மிஞ்சிய நிதிகள் (2021-22)' என்ற தலைப்பில் இந்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
  • நிதி, பாதுகாப்பு, இரயில்வே மற்றும் இரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகங்கள் ஆனது 2021-22 ஆம் ஆண்டிற்குப் பாராளுமன்றம் அனுமதித்த நிதி ஒதுக்கீடுகளை விட அதிகமாக 1,291.14 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
  • 2021-22 ஆம் நிதியாண்டில், மொத்தம் 1,291.14 கோடி ரூபாய் நிதி அமைச்சகத்தினால் (742.56 கோடி ரூபாய்) செலவிடப்பட்டுள்ளது.
  • அதைத் தொடர்ந்து இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் ஆனது (493.38 கோடி ரூபாய்), இரயில்வே அமைச்சகம் (55.16 கோடி ரூபாய்), பாதுகாப்பு அமைச்சகம் (3.17 கோடி ரூபாய்) செலவிட்டுள்ளன.
  • சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஏற்கனவே கணிசமான துணை (கூடுதல்) மானியங்களைப் பெற்றுள்ளன.
  • 0.67% முதல் 10.41% வரையிலான அதிக செலவின வீதத்தில் மிகையான செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்