பொதுப் பயன்பாட்டு மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள்- 2023
August 15 , 2024 100 days 144 0
2024-25 ஆம் நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள பொது மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள் 1.727 மில்லியன் அலகு (MU) மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளன.
2024-25 ஆம் நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் இந்தியா முழுவதும் உள்ள பொது மின்னேற்ற நிலையங்களின் ஒட்டுமொத்த மின் நுகர்வு 113.58 MU ஆக இருந்தது.
தமிழ்நாட்டில் 163 பொது மின்னேற்ற நிலையங்கள் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1.032 MU மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ள அதே நேரத்தில் 154 பொது மின்னேற்ற நிலையங்கள் 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் 0.695 MU மின்சாரத்தைப் பயன்படுத்தி உள்ளன.
கோயம்புத்தூர், விழுப்புரம், திருநெல்வேலி, சென்னை வடக்கு மற்றும் வேலூர் ஆகியவை பொது மின்னேற்ற நிலையங்களை கொண்ட தமிழ்நாட்டின் சில முக்கியப் பகுதிகளாகும்.
2023-24 ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள பொது மின்னேற்ற நிலையங்கள் 13.383 MU மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளன.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், பதிவான மின்சார நுகர்வு முறையே 1.438 MU மற்றும் 1.422 MU ஆக இருந்தது.
நாட்டில் விற்கப்படும் நான்கு சக்கர மின்சார வாகனங்களில் சுமார் 40% மற்றும் இரு சக்கர மின்சார வாகனங்களில் 70% ஆனது தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப் படுகின்றன.
டெல்லி (54.43 MU), மகாராஷ்டிரா (28.64 MU), குஜராத் (8.78MU) ஆகியவை பொது மின்னேற்ற நிலையங்களின் மின்சார நுகர்வு அடிப்படையில் முதலிடத்தில் உள்ளன.