எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியரான பல்ராம் பார்கவாவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (Indian Council of Medical Research-ICMR) பொது இயக்குநராகவும் (Director General), மத்திய சுகாதார ஆராய்ச்சித் துறையின் (Department of Health Research) செயலாளராகவும் மத்திய அரசு நியமித்துள்ளது.
இவர் மூன்று ஆண்டு காலம் வரை அல்லது தன்னுடைய 60-வது வயது வரை இப்பதவியில் இருப்பார்.
ICMR
மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழுவானது (Indian Council for Medical Research) இந்திய ஆராய்ச்சி நிதிச் சங்கம் (Indian Research Fund Association -IRFA) என்ற பெயரில் 1911-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இது உலகின் மிகவும் பழமையான மற்றும் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பாகும்.
உயர் மருத்துவ ஆராய்ச்சியின் மேம்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் மருந்துப் பொருட்களின் உள்ளடக்கக் கூறுகளின் கலப்பு உருவாக்கம் (Formulation) ஆகியவற்றுக்கான இந்தியாவின் உச்சபட்ச அறிவியல் அமைப்பே மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக்குழு ஆகும்.
புதுதில்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்தக் குழுவானது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித்துறையின் கீழ் செயல்படுகின்றது.
மத்திய சுகாதார அமைச்சர் மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழுவினுடைய நிர்வாக அமைப்பின் (Governing body) தலைவராவார்.