ஐக்கிய நாடுகள் சபையானது, அமைதிச் செயல்முறைகளில் பெண்களின் பங்கேற்பு குறித்த பொதுச் செயலாளரின் ஒரு பொது உறுதிமொழி முன்னெடுப்பினை (Common Pledge) வெளியிட்டுள்ளது.
இது உலகளவில் அமைதியை உருவாக்குவதிலும், அதனைக் கட்டியெழுப்புவதிலும் பெண்களின் பங்கை வலுப்படுத்துவதற்கான ஒரு புதிய முயற்சியாகும்.
2023 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பின் தரவுகளின் படி, பெண்கள், சராசரியாக, சமாதான பேச்சுவார்த்தை அமைப்புகளில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவும், நடுவண் அமைப்புகளில் சுமார் 13.5 சதவீதத்திற்கும் குறைவான பங்கினையே கொண்டுள்ளனர்.
இந்தப் பொது உறுதிமொழி முன்னெடுப்பு ஆனது, பல அமைதிச் செயல்முறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணையுமாறு பல்வேறு உறுப்பினர் நாடுகள், பிராந்திய அமைப்புகள் மற்றும் நடுவண் விவகாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இன்ன பிற அமைப்புகளை வலியுறுத்துகிறது.