மத்திய அரசானது ரூ.200 கோடிக்குக் குறைவான மதிப்பு கொண்ட சரக்குகள் மற்றும் சேவைகளை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதை உறுதி செய்வதற்காக பொது நிதியியல் விதிகளை (GFR- General Financial Rules) திருத்தியுள்ளது.
இதற்காக GFR 2017 ஆனது மத்திய அரசினால் திருத்தப் பட்டுள்ளது.
புதிய திருத்தத்தின்படி, இனி உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் ரூ.200 கோடி மதிப்பு வரையிலான அரசாங்கக் கொள்முதலில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாது.
“உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் அனுமதிக்கப்பட மாட்டாது” என்பது உள்நாட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காக வேண்டி ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு அந்நிய முதலீட்டைத் தடை செய்தல் என்பதாகும்.